Enable Javscript for better performance
"தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வதை மதரஸாக்கள் ஊக்குவிக்கின்றன'- Dinamani

சுடச்சுட

    

    "தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வதை மதரஸாக்கள் ஊக்குவிக்கின்றன'

    By DIN  |   Published on : 10th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வதை மதரஸாக்கள் ஊக்குவிப்பதாக உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவர் வாஸிம் ரிஸ்வி எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையிலேயே, மதரஸாக்களில் போதிக்கப்படும் கல்வி முறைகள் இருக்கின்றன. இதேபோல், நாட்டில் உள்ள பெரும்பாலான மதரஸாக்கள் அங்கீகாரம் பெறாதவை ஆகும். அவற்றில் கல்வி பயிலுவோர் வேலை கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில மதரஸாக்களுக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து நிதி வருகின்றன. சில மதரஸாக்களுக்கு தீவிரவாத அமைப்புகள் நிதியுதவி அளிக்கின்றன.
    ஆதலால், நாடு முழுவதும் உள்ள மதரஸாக்களை மூட வேண்டும். அனைத்து மதரஸா வாரியங்களையும் அரசு கலைக்க வேண்டும். அதற்குப் பதிலாக, சிபிஎஸ்இ போன்ற அமைப்புகளுடன் இணைந்த பள்ளிகளாக மதரஸாக்களை மாற்ற வேண்டும். அங்கு முஸ்லிம் அல்லாத பிற மதத்தைச் சேர்ந்த மாணவர்களையும் சேர்க்க வேண்டும். இதன்படி செய்தால், நமது நாடு மேலும் வலுவடையும் என்று அந்த கடிதத்தில் ரிஸ்வி குறிப்பிட்டுள்ளார்.
    முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்: இதனிடையே, ரிஸ்வியின் கருத்துக்கு அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் கூறுகையில், "சுதந்திரப் போராட்டத்தில் மதரஸாக்கள் முக்கிய பங்கு வகித்தன; இந்த பள்ளிகள் குறித்து கேள்வியெழுப்பினால், சுதந்திர போராட்டத்துக்கு மதரஸாக்கள் ஆற்றிய பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும்' என்று குறிப்பிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai