Enable Javscript for better performance
மாநகராட்சி செயல்பாடுகளில் திருப்தி இல்லை: பாஜக தலைவரின் பேச்சால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி செயல்பாடுகளில் திருப்தி இல்லை: பாஜக தலைவரின் பேச்சால் பரபரப்பு

    By DIN  |   Published on : 10th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பா.ஜ.க ஆளும் தில்லி மாநகராட்சிகளின் செயல்பாடுகளில், தான் திருப்தி அடையவில்லை என்று அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரியே விமர்சித்துள்ளார்.
    தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற்றது. 
    இந்நிலையில், மாநகராட்சிகளின் செயல்பாடுகளில் தான் திருப்தி அடையவில்லை என்று அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
    மக்கள் அறிவாளிகள். அவர்கள் அவ்வளவு எளிதாக ஆளும் வாய்ப்பை கட்சிகளுக்கு வழங்கவிட மாட்டார்கள். 
    ஆனால், தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் பாஜகவுக்கு ஆளும் வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
    தில்லி மாநகராட்சிகளின் செயல்பாடுகளில் நான் திருப்தி அடையவில்லை. 
    அவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் இன்னும் அர்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்; கடினமாக உழைக்க வேண்டும். சட்டப்பேரவையில் 67 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள ஆம் ஆத்மிக் கட்சியால் மாநகராட்சித் தேர்தலில் 67 கவுன்சிலர்களைக் கூட ஜெயிக்க வைக்க முடியவில்லை. 
    பாஜகவின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டதால்தான் மாநகராட்சித் தேர்தலில் எங்களை பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறச் செய்தனர். 
    மாநகராட்சியை ஆளும் பாஜகவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். 
    எனவே, அனைத்து பாஜக கவுன்சிலர்களும் தங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பைச் சரியாகப் பயண்படுத்தி சேவையாற்ற வேண்டும் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai