Enable Javscript for better performance
மேக்ஸ் மருத்துவமனை விவகாரம்: தில்லி அரசின் உத்தரவு மீதான தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேக்ஸ் மருத்துவமனை விவகாரம்: தில்லி அரசின் உத்தரவு மீதான தடை  மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

    By DIN  |   Published on : 10th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஷாலிமார் பாக் மேக்ஸ் மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்து தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
     பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்ததாக மேக்ஸ் மருத்துவமனை அறிவித்த பின்பு, அதில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்தக் குழந்தையும் சில தினங்களுக்கு பிறகு இறந்துவிட்டது. 
    இந்த சம்பவத்தில் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறி, அந்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை தில்லி அரசு கடந்த டிசம்பர் 8-ம் தேதி ரத்து செய்து அறிவித்தது. 
    தில்லி அரசின் தடை உத்தரவுக்கு எதிராக நிதி ஆணையர்கள் நீதிமன்றத்தில் மேக்ஸ் மருத்துவமனை மேல் முறையீடு செய்திருந்தது. அதில், தில்லி அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஜனவரி 9-ம் தேதிக்கு அடுத்த விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. 
    சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு, தில்லி அரசின் அங்கீகாரம் ரத்து உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு, அடுத்த விசாரணை பிப்ரவரி 8-ம் தேதிக்கு நிதி ஆணையர்கள் நீதிமன்றம் ஒத்தி வைத்ததாக, தில்லி அரசின் சுகாதார சேவைகள் துறையின் இயக்குநர் கீர்த்தி பூஷண் தெரிவித்தார்.
    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மேக்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மேக்ஸ் மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்து தில்லி அரசு பிறப்பித்திருந்த உத்தரவு மீதான தடை, பிப்ரவரி 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
    மேக்ஸ் மருத்துவமனை மாதந்தோறும் சுமார் 15,000 புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதில் 3,000 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், இரட்டை குழந்தைகள் விவகாரம் குறித்து விசாரித்து வரும் தில்லி போலீஸ், தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. 
    இதையடுத்து, இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று தில்லி போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
    தில்லி போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "இரட்டை குழந்தைகளின் பிறந்த நேரம் மட்டுமே மருத்துவமனையின் பதிவேட்டில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகள் உயிரிழந்த நேரத்தை மேக்ஸ் மருத்துவமனை பதிவிடவில்லை. 
    மேலும், உயிரிழந்ததாக கூறப்பட்ட இரண்டு குழந்தைகளையும் மேக்ஸ் மருத்துவனை தனித்தனியாக பாக்கெட்டுகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்று விசாரணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai