Enable Javscript for better performance
"இக்னோ' மாணவர் திடீர் மாயம்: தில்லி போலீஸார் தீவிர விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    "இக்னோ' மாணவர் திடீர் மாயம்: தில்லி போலீஸார் தீவிர விசாரணை

    By DIN  |   Published on : 11th January 2018 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முனைவர் பட்ட (பிஎச்.டி.) மாணவர் முகுல் ஜெயின் (26) திடீரென காணாமல் போனார். அவரது இருப்பிடம் குறித்து தில்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    இதுகுறித்து தில்லி காவல்துறையினர் புதன்கிழமை கூறியதாவது:
    தில்லியில் உள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனமான ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இக்னோவில் வாழ்க்கை அறிவியல் புலத்தில்  முகுல் ஜெயின் என்பவர் முனைவர் பட்ட ப் படிப்பில் சேர்ந்து படித்து வந்தார்.  இந்நிலையில்,  அவர் திங்கள்கிழமை திடீரென காணாமல் போய்விட்டதாக  புகார் அளிக்கப்பட்டது.  கடைசியாக அவர் பல்கலைக்கழக வளாகத்தின் கிழக்கு நுழைவு வாயிலில் இருந்து சென்றதாகவும்,  அவருக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுரீதியான பிரச்னைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  அவர் இருப்பிடம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதனிடையே,  மாணவர் முகுல் ஜெயின் குறித்த தகவல்கள் ஏதும் தெரிந்தால் அது பற்றி பல்கலைக்கழகத்தின் பாதுகாவலாளிகளிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கெனவே  2016-ஆம் ஆண்டு,  அக்டோபரில் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம்எஸ்சி உயிரி தொழில்நுட்ப   மாணவர் நஜீப் அகமது பல்கலைக்கழக வளாக விடுதியில் இருந்து காணாமல் போனார்.   
    இச்சம்பவத்திற்கு முன்னதாக,  அவருக்கும்,  அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே கைகலுப்பு ஏற்பட்டது. காணாமல் போன நஜீப் அகமதின் இருப்பிடம் குறித்த தகவலை தில்லி போலீஸார் சேகரித்து வந்தனர். எனினும், அவரைக்  போலீஸாரால் கண்டறிய முடியவில்லை. 
    இதையடுத்து,   கடந்த ஆண்டு  மே மாதத்தில் மாணவர் நஜீப் அகமது தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இந்நிலையில்,  இரண்டாவது சம்பவமாக தற்போது ஜே.என்.யு. மாணவர் முகுல் ஜெயின் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai