Enable Javscript for better performance
உருமாற்றக் கட்டணம்: தெற்கு தில்லி மாநகராட்சி ரூ.17.50 கோடி வசூல்!- Dinamani

சுடச்சுட

    

    உருமாற்றக் கட்டணம்: தெற்கு தில்லி மாநகராட்சி ரூ.17.50 கோடி வசூல்!

    By DIN  |   Published on : 11th January 2018 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்களிடம் இருந்து உருமாற்றக் கட்டணமாக ரூ. 17.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குடியிருப்புத் தளத்தை வணிகத் தளமாக மாற்றுவதற்கு  மாநகராட்சிக்கு  உருமாற்றக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வணிக வளாகங்கள் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி, டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி முதல் சீல் வைக்கப்படுகின்றன. முதலில் உருமாற்றக் கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.89,000 என நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, அந்தக் கட்டணம் ரூ.22,174 ஆகக் குறைக்கப்பட்டது. 
    இந்நிலையில், இது வரை உருமாற்றக் கட்டணமாக ரூ.17.50 கோடி வசூலாகியுள்ளாதாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:  கடந்த டிசம்பர்  22- ஆம் தேதியில் இருந்து இது வரை உருமாற்றக் கட்டணமாக ரூ.17 கோடி வசூலாகியுள்ளது.  கிரேட்டர் கைலாஷ், லாஜ்பாத் நகர், டிஃபன்ஸ் காலனி, ஹோஸ்ஹாஸ் மார்க்கெட், சட்டாப்பூர், வசந்த் விஹார் ஆகிய இடங்களில் அதிகளவு உருமாற்றக் கட்டணம் வசூலானது. மேற்கு மண்டலத்தில் ரூ.4.66 கோடி, தெற்கு மண்டலத்தில் ரூ.5.72 கோடி, மத்திய மண்டலத்தில் ரூ 6.18 கோடி, நஜாப்பூர் பகுதியில் ரூ.91 லட்சம் வசூலாகியுள்ளது.
    இதற்கிடையே, உருமாற்றக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஹோஸ்ஹாஸ்  வியாபாரிகள்  சங்கத்தின் செயலர் மன்மோகன் சிங் கூறுகையில், "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூன் 30-ஆம் தேதியை உருமாற்றக் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக அறிவித்திருந்தது. ஆனால், கண்காணிப்புக் குழு  ஜனவரி 15- ஆம் தேதி என அறிவித்துள்ளது. நாங்கள் யாரை நம்புவது?' என்றார். இது தொடர்பாக ஜி.கே.1 எம் பிளாக் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்தர் சர்தா கூறுகையில், "பல வணிகர்கள் உருமாற்றக் கட்டணமாக 2010-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சதுர அடிக்கு ரூ.6,200  வீதம்  செலுத்தியுள்ளனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai