Enable Javscript for better performance
எஸ்டிஎம்சியில் 135 கடைகளுக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (எஸ்டிஎம்சி) மேஹர்சந்த் மார்க்கெட் பகுதியில் 135 கடைகள் புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. 
    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 
    மேஹர் சந்த் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்தன.  இதையடுத்து,  நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.  இந்நிலையில், புதன்கிழமை இப்பகுதியில் உள்ள 153 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் 135 கடைகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கடைகள் சீல் வைக்கப்பட்டன.  முதல் தளத்தில் இருந்த கடைகள் மட்டுமே சீல் வைக்கப்பட்டன. இங்கு செயல்பட்டு வரும்  இரண்டு வங்கிகளுக்கு இருநாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai