Enable Javscript for better performance
கால்நடைகளை திருடி விற்ற  5 பேர் கும்பல் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேசியத் தலைநகர் வலயம்,  ஃபரீதாபாதில் கால்நடைகளைத் திருடி விற்றதாக 5 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து ஃபரீதாபாத் காவல் துணை ஆணையர் (என்ஐடி) கிராத் பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    சம்பவத்தன்று கோரி கிராமம் அருகே கால்நடைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில் அவர்கள் ஹரியாணா மாநிலம், மேவாத் கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப்,  சஹீத், ரசீத்,    ஃபரீதாபாதைச் சேர்ந்த முகிம்,  இஸுஃப் ஆகியோர் என்பதும்,  கால்நடைகளைத் திருடி விற்று வந்ததும் தெரிய வந்தது.  
    மேலும்,  8 திருட்டு வழக்குகளில்  தொடர்புடைய  அவர்களிடம் இருந்து துப்பாக்கி,  தோட்டா, இரும்பு கம்பிகள், ஐந்து எருமைகள்,  கார், மோட்டார்சைக்கிள்,  கால்நடைகளை ஏற்றிச் செல்லும் இரு வாகனங்கள், ரொக்கம் ரூ.60 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    அவர்கள் பகலில் கால்நடைகளைத் திருடவுள்ள பகுதிக்குச் சென்று நோட்டமிட்டு,  இரவில் ஆயுதங்களுடன் சென்று அவற்றைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். திருடிய எருமைகள் உள்ளிட்டவற்றை வேனில் ஏற்றி அலிகர்,  ஃபிரோஸ்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்று வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
    ஏற்கெனவே திருட்டு வழக்குகள் தொடர்பாக ஆரிஃப்,  இஸுப் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு குர்கானில் உள்ள போன்ட்ஸி சிறையிலும், ஃபரீதாபாதில் உள்ள நிம்கா சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தது விசாரணயின்போது தெரியவந்ததாக காவல் உயர் அதிகாரி கிராத் பால் கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai