Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கொள்ளையனை விரட்டி பிடித்த சகோதரிகள்- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையனை, விரட்டிப் பிடித்த சகோதரிகளின் துணிச்சலான செயலை தில்லி போலீஸார் பாராட்டியுள்ளனர்.
     இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
    திருமணத்துக்கான ஜவுளிகளை சந்தினி சௌக் பகுதியில் திரிஷா, ஆருஷி சகோதரிகள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், திரிஷாவின் பையில் இருந்த செல்லிடப்பேசியை திடீரென பறித்துக் கொண்ட இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைக் கண்ட திரிஷாவும், ஆருஷியும் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். குறுகிய சாந்தினி சௌக் சாலைகளிலும் அந்த இளைஞரை விடாமல் பின்தொடர்ந்து திருடன், திருடன் என்று கத்தியபடி ஓடியுள்ளனர். சிறிது நேரத்தில் இளைஞரை பிடித்த திரிஷா, அவரது கன்னத்தில் இரண்டு முறை அறைந்துள்ளார்.
    பின்னர்அங்கிருந்தவர்களும் ஒன்றுகூடி அந்த இளைஞரை மடக்கியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த  போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளையனை பிடித்து, அவனிடம் இருந்த செல்லிடப்பேசியை திரிஷாவிடம் அளித்தனர். விசாரணையில் சலீம் பேக் என்ற அந்த இளைஞர் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai