Enable Javscript for better performance
"நிகழாண்டில் புதிதாக 1,000 கிளஸ்டர் பேருந்துகள்'- Dinamani

சுடச்சுட

    

    நிகழாண்டில் தில்லியில் புதிதாக 1,000 கிளஸ்டர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
    தில்லி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிகழாண்டில் தில்லியில் புதிதாக 1,000 கிளஸ்டர் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  
    முதல் பிரிவு பேருந்துகள் ஆகஸ்டில் இயக்கப்படும். இப்பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதியில்லாத வழக்கமான பேருந்துகளாக இருக்கும்.  இப்பேருந்துகளில் பல தில்லியின் கிராமப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் இயக்கப்படும்.  
    இதற்கான கொள்முதல் எட்டுமாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     இப்புதிய பேருந்துகளில் 100 பேருந்துகள் ரேவ்லா கான்பூர் பணிமனையிலும்,   250 பேருந்துகள் துவாரகா செக்டார் 22 பணிமனையிலும், 120 பேருந்துகள் கர்கரி நாஹர் பணிமனையிலும், 90 பேருந்துகள் பவானா செக்டார் 1 பணிமனையிலும், 160 பேருந்துகள் ரானி கேரா-1  பணிமனையிலும்,  தலா 140 பேருந்துகள் ரானி கேரா -2,  ரானி கேரா -3 ஆகிய பேருந்து பணிமனைகளிலும் சேர்க்கப்படும் என்றார் அவர். 
    தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், "பேருந்துகளை நிறுத்துவதற்குத் தேவையான நிலத்தை டிடிஏ வழங்கினால்  இன்னும் கூடுதல் பேருந்துகளை தில்லி அரசால் கொள்முதல் செய்ய முடியும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai