Enable Javscript for better performance
மோசமான வானிலை: 22 ரயில்கள் ரத்து; 49 தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியில் புதன்கிழமை வெப்பநிலை சற்று உயர்ந்திருந்தது. இருப்பினும் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காலையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    தில்லியில் கடந்த  வாரத்திலிருந்தே குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசுவதால், மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக குறைந்தபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறைந்து கொண்டே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 4.2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது.
    இந்நிலையில், புதன்கிழமை காலையில் லேசான வெயில் இருந்தது. இருப்பினும் குளிர் காற்று வீசியது. தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலையில் நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக வானிலை காரணமாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்தது. 3 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. 49 ரயில்கள் தாமதமாக சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
    சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை  குறைந்தபட்ச வெப்பநிலை 6.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.  இதேபோன்று லோதி ரோடில் குறைந்தபட்ச வெப்பநிலை 6, பாலத்தில் 7.4, ரிட்ஜில் 8 மற்றும் ஆயாநகரில் 9 டிகிரி செல்சியஸ் என   பதிவாகியிருந்தது. சஃப்தர்ஜங் மற்றும் பாலம் வானிலை ஆய்வு மையங்களில் காலை வேளையில் காண்புதிறன் 800 மீட்டராக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரபதத்தின் அளவு 87 சதவீதமாக இருந்தது. 
    முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் அடர் பனிமூட்டம்  நிலவும் எனறும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai