Enable Javscript for better performance
220 பணிநாள்களை உறுதி செய்யுங்கள்: தில்லி பள்ளிகளுக்கு அரசு சுற்றறிக்கை- Dinamani

சுடச்சுட

    

    220 பணிநாள்களை உறுதி செய்யுங்கள்: தில்லி பள்ளிகளுக்கு அரசு சுற்றறிக்கை

    By DIN  |   Published on : 11th January 2018 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஒரு கல்வி ஆண்டில், 220 பணிநாள்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
    அந்த சுற்றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    கல்வி உரிமம் சட்டத்தின்படி, ஒரு கல்வி ஆண்டில் 220 பணிநாள்களில் பள்ளிகள் செயல்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை கடைப்பிடிக்க வேண்டியது தில்லியில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகங்களின் கடமையாகும். 
    ஆகையால், பிரைமரி வகுப்புகளுக்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு குறைந்தபட்ச பணிநாள்களான 220-நாள்கள் பள்ளிகள் செயல்படும் என்பதை உறுதிப்படுத்தி, பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தில்லி கல்வி இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai