Enable Javscript for better performance
சிறுமி பலாத்காரம்: காவலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நொய்டாவில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக காவலர் ஒருவரை அப்பகுதி மக்களே பிடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
    இந்தச் சம்பவம் தொடர்பாக சூரஜ்பூர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அகிலேஷ் பிரதான் வியாழக்கிழமை கூறியதாவது:
    நொய்டா போலீஸில் காவலராக உள்ள சுபாஷ், விற்பனை வரித் துறையில் அயற்பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு அருகே விலையாடிக் கொண்டிருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் 6 வயது சிறுமியை சுபாஷ் கடத்தி கொண்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சுபாஷ் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை மீட்டுள்ளனர். அப்போது சுபாஷ் மதுபோதையில் இருந்துள்ளார். சுபாஷை அடித்து உதைத்த அப்பகுதி மக்கள் பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai