Enable Javscript for better performance
செங்கோட்டை தாக்குதல் வழக்கு: கைது  செய்யப்பட்டவருக்கு 10 நாள் போலீஸ் காவல்- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டை தாக்குதல் வழக்கு: கைது  செய்யப்பட்டவருக்கு 10 நாள் போலீஸ் காவல்

    By DIN  |   Published on : 12th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 2000-ஆம் ஆண்டு தில்லி செங்கோட்டையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிலால் அஹமத் காவா என்பவரை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
    ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் புதன்கிழமை மாலை வந்த காவாவை, குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரின் தகவலின்பேரில், தில்லி டி-3 விமான நிலையத்தில் தில்லி போலீஸார் கைது செய்தனர். 
    அவரை, தில்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் ஷேராவத் முன் வியாழக்கிழமை தில்லி போலீஸார் ஆஜர்படுத்தினர். காவாவை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  வேண்டும் என்று தில்லி போலீஸார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தீபக் ஷேராவத் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
    காவாவுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. செங்கோட்டை தாக்குதல் சம்பவத்தை நடத்த காவா உள்ளிட்ட பலரது வங்கி கணக்குகளில் சுமார் ரூ. 29.50 லட்சம் ஹவாலா பணம் பறிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் தலைமறைவாக இருந்து வந்த காவாவை தேடி வந்ததாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai