Enable Javscript for better performance
தனியார் நிறுவன கட்டடங்கள் சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட(என்.டி.எம்.சி.) கிஷன் கஞ்ச், பாரா ஹிந்து ராவ் ஆகிய பகுதிகளில் உள்ள டிசிஎம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்குச்  சொந்தமான 31 யூனிட்டுகள் வியாழக்கிழமை மாநகராட்சி  அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. 
    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
    உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவினரும், மாநகராட்சி அதிகாரிகளும் கிஷன் கஞ்ச், பாரா ஹிந்து ராவ் ஆகிய பகுதிகளில் உள்ள டிசிஎஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான வளாகங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது இந்த  வளாகங்களில் முறைப்படி அனுமதி பெறாமல் விற்பனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
    மேலும், சில இடங்களில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்ததும்  தெரிய வந்தது. 
    இதைத் தொடர்ந்து, அதன் 31 யூனிட்டுகள் சீல் வைக்கப்பட்டன. தில்லியில் உள்ள இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஏனைய பகுதிகளிலும் விரைவில் சோதனை நடத்தப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai