Enable Javscript for better performance
தூய்மை : கடைசி இடத்தில் நிஜாமுதீன் ரயில் நிலையம்-கோழிக்கோடு ரயில் நிலையத்துக்கு முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை : கடைசி இடத்தில் நிஜாமுதீன் ரயில் நிலையம்-கோழிக்கோடு ரயில் நிலையத்துக்கு முதலிடம்

    By DIN  |   Published on : 12th January 2018 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டிலேயே தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில் தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையம் கடைசி இடம் பிடித்துள்ளது. கேரள மாநிலத்தின் கோழிக்கோடு ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மையான ரயில் நிலையமாக முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியாவில் உள்ள 40 சதவீத ரயில் நிலையங்கள் தூய்மையாக உள்ளதாகவும், மத்திய இந்தியாவிலும், மேற்கு இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் தலா 20 சதவீதம் தூய்மையாக உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
    ரயில் பயணிகளிடம் தனியார் சுற்றுலா ஆப் "இக்சிகோ' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
    தூய்மையில் சிறந்த ரயில் நிலையங்களாக ஹூப்லி சந்திப்பு, தேவங்கிரி (கர்நாடகம்), தன்பத் சந்திப்பு (ஜார்க்கண்ட்), ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்), பிலாஸ்பூர் சந்திப்பு (சத்தீஸ்கர்), வதோத்ரா, ராஜ்கோட் சந்திப்புகள் (குஜராத்), ஃபல்னா (ராஜஸ்தான்), விஜயவாடா சந்திப்பு (ஆந்திர பிரதேசம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறைந்த அளவே தூய்மை உள்ளதாக வாராணசி, மதுரா சந்திப்புகள் (உத்தரப் பிரதேசம்), அஜ்மீர் சந்திப்பு (ராஜஸ்தான்), புசாவல் சந்திப்பு (மஜாராஷ்டிரம்), கயை சந்திப்பு (பிகார்) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
    இதேபோல், தூய்மையான ரயில்கள் பட்டியலில் ஸ்வர்ன ஜெயந்தி ராஜ்தானி ரயில் முதலிடத்தையும், கர்நாடக எக்ஸ்பிரஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. 
    இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியுடன் இணைந்து இக்சிகோ ஆப் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் ஆப்பை செயல்படுத்தி வருகிறது. சுமார் 70 லட்சம் பேர் இந்த ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களிடம் ரயில் நிலையங்களின் தூய்மை குறித்த ஆய்வு நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
    கடந்த ஆண்டு இந்திய ரயில்வே சார்பில் நடத்தப்பட்ட தூய்மை தொடர்பான ஆய்வில், வடக்கு ரயில்வேக்கு உள்பட்ட ஜலந்தர் - அமிருதசரஸ் வழித்தடத்தில் உள்ள பியஸ் ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மையான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டது. தென் மாநிலங்களில் உள்ள பல ரயில் நிலையங்கள் சிறந்த தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai