Enable Javscript for better performance
பனிமூட்டம்: 22 ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வியாழக்கிழமை நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக 22 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்தது.
    தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது. தில்லியில் இரு நாள்களுக்கு முன்பு, குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இந்நிலையில், வியாழக்கிழமையும் காலையில் அடர் பனிமூட்டம் நிலவியது. இருப்பினும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காண்புதிறன் 800 மீட்டராகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 87 சதவீத
    மாகவும் பதிவாகியிருந்தது. 
    இதற்கிடையே, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவி வரும் அடர் பனிமூட்டம் காரணமாக வியாழக்கிழமை 22 ரயில்களின் சேவையை வடக்கு ரயில்வே ரத்து செய்தது. மேலும், 9 ரயில்களின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. 30 ரயில்கள் தாமதமாகச் சென்று கொண்டிருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. பனிமூட்டம் காரணமாக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திலும் சிறிதளவு பாதிப்பு காணப்பட்டது. இதனால், விமானங்களின் நேர அட்டவணையை பார்ப்பதற்காக பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்ததைக் காணமுடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai