Enable Javscript for better performance
"பள்ளி முதல்வர்களுக்கே  அதிக பொறுப்பு'- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளை இயக்குவதில் அந்தப் பள்ளியின் உரிமையாளரை விட பள்ளி முதல்வர்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது என்று தில்லி துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
    பள்ளி முதல்வர்களுக்கான  இரண்டு நாள் மாநாடு தில்லி விஞ்ஞான பவனில் வியாழக்கிழமை தொடங்கியது. 1,024 பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் மணீஷ் சிசோடியா பங்கேற்றுப் பேசியதாவது:
    பள்ளிகளை இயக்குவதற்கான பொறுப்பு உரிமையாளர்களிடம் உள்ளது. ஆனால், பள்ளி மேலாண்மை குழுக்களுடன் பள்ளி முதல்வர்கள் இணைந்து பள்ளிகளை இயக்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. பள்ளியில் நடைபெறும் சம்பவங்களுக்கு பள்ளி முதல்வர்களும், உரிமையாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றார் மணீஷ் சிசோடியா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai