பிளாஸ்டிக் பொம்மைகள் கிட்டங்கியில் தீ விபத்து: 5 பேர் காயம்
By DIN | Published on : 12th January 2018 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி உஸ்மான்பூரில் பிளாஸ்டிக் பொம்மைகள் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:
உஸ்மான்பூரில் உள்ள பிளாஸ்டிக் பொம்மைகள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாலை 5 மணி அளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதலில் தரை தளத்தில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து கட்டடத்தின் முதல், இரண்டாவது தளங்களுக்குப் பரவியது. இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள ஜாக் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.