Enable Javscript for better performance
பெட்ரோல் ஏற்றிச் செல்ல புதிய டீசல் லாரிகள்: பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோல் ஏற்றிச் செல்ல புதிய டீசல் லாரிகள்: பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி

    By DIN  |   Published on : 12th January 2018 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெட்ரோலியப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய டீசல் லாரிகளை பதிவு செய்து கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
    தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த புதிய டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கும், 10 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை இயக்குவதற்கும் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது.
    இந்தத் தடையில் இருந்து பெட்ரோலிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி பெட்ரோலிய பொதுத் துறை நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு, தீர்ப்பாயத்தின் தலைவரும் (பொறுப்பு) நீதிபதியுமான யு.டி. சால்வி அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.  அப்போது, "10 ஆண்டுகள் பழைமையான லாரிகளை பெட்ரோலிய பொருள்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுவதில்லை; பெட்ரோலியப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டும் புதிய டீசல் லாரிகள் பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என்று பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
    இதை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாய அமர்வு, சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. அதில், "பிஎஸ்-4 ரக புதிய லாரிகளை மட்டும் பதிவு செய்ய வேண்டும். அந்த லாரிகளில் பெட்ரோலிய பொருள்களை மட்டும் ஏற்றிச் செல்லப்படும் என்று வட்டார போக்குவரத்துக்கு உறுதி அளிக்கப்பட  வேண்டும். தற்போதுள்ள லாரிகளின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று  தீர்ப்பாயம் நிபந்தனைகளை விதித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai