Enable Javscript for better performance
பைக் மீது ஜீப் மோதல்:  இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தென்மேற்கு தில்லி, சமல்கா கிராமத்தில் வேகமாகச் சென்ற ஜீப் ஒன்று  மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். ஜீப் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
    இது குறித்து போலீஸார் கூறியதாவது: 
    தில்லி நஜஃப்கர் அருகே உள்ள பப்ரோலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் சிங் (25).  திங்கள்கிழமை வெளியில் சென்றிருந்த அவர், வீட்டுக்கு இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.  ஒரு சிக்னலைக் கடக்கும் போது அந்த வழியாக வேகமாகச் சென்ற ஜீப் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தீபக் சிங் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.  இதையடுத்து,  ஜீப்பின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து  தப்பினார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து,  ஜீப் ஓட்டுநர் கைது கைது செய்யப்பட்டார். இந்த விபத்து நிகழ்ந்த போது, ஜீப் ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai