Enable Javscript for better performance
பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை: வடக்கு தில்லி மாநகராட்சி எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை: வடக்கு தில்லி மாநகராட்சி எச்சரிக்கை

    By DIN  |   Published on : 12th January 2018 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆணையர் மதூப் வியாஸ் கூறியதாவது:
    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டுவது தொடர்பாக தொடர்ந்து  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
    அவர்கள் பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டுபவர்களுக்கு ரூ. 5,000 வரை அபராதம் விதிக்க உள்ளனர்.  நோட்டீஸ் ஒட்டுவதற்கென தனியாக சில இடங்கள் ஒதுக்கப்படும். அங்கு மட்டுமே நோட்டீஸ் ஒட்டிக் கொள்ளலாம். அதை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்.  மாநகராட்சியின் இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai