Enable Javscript for better performance
மயூர் விஹார் கணபதி கோயிலில் "கூடாரை வெல்லும்' உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    மயூர் விஹார் கணபதி கோயிலில் "கூடாரை வெல்லும்' உத்ஸவம்

    By DIN  |   Published on : 12th January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு தில்லி,   மயூர்விஹார் பேஸ் 2-இல் அமைந்துள்ள அருள்மிகு காருண்ய மகா கணபதி கோயிலில்  மார்கழி  உத்ஸவத்தையொட்டி  வியாழக்கிழமை  "கூடாரை வெல்லும்' உத்ஸவம் நடைபெற்றது.  இந்த நிகழ்வில்,  ஏராளமான பக்தர்கள் திரளாகப் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
    ஆண்டாளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மதுரை அருகே உள்ள திருமாலிருஞ்சோலை எனும் அழகர்கோயில் அழகருக்கு ராமானுஜர்  அக்கார வடிசில் வழங்கியதை நினைவுகூரும் வகையில் இந்த உத்ஸவம் நடைபெற்றது. 
    இதையொட்டி, கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கநாதர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் அலங்காரம் செய்விக்கப்பட்டது. அத்திருவுருப்படங்களின் முன் 100 பித்தளைக் குவளைகள் வரிசைப்படி அடுக்கிவைக்கப்பட்டு, அவற்றில் அக்கார வடிசில் எனும் இனிப்பு கலந்த பிரசாதம் நிரப்பப்பட்டது.  
    பின்னர்,  "நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை  நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்.  நூறு தடா நிறைந்த அக்காரை வடிசில்' எனும் பாசுரத்தை பக்தர்கள் பாடினர்.  தொடர்ந்து சுவாமி ரங்கநாதருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.   பின்னர்,  உத்ஸவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அக்கார வடிசில் பிரசாதம்  வழங்கப்பட்டது. 
    இக்கோயிலில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற  தனுர் மாத நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கணேச சேவா சமாஜத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் விஜய குமார்,  தினந்தோறும் காலையில் திருப்பாவை குறித்து சிறு உரை நிகழ்த்திய ஹயகிரீவா அமைப்பின் அமைப்பாளர் மீனா வெங்கி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  முன்னதாக,  கணேசா சேவா சமாஜத்தின் தலைவர் எஸ்.ஜெயராமன் வரவேற்றார். துணத் தலைவர் ஆர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.
    இதேபோன்று, தில்லி வசுந்தரா என்கிளேவில் உள்ள ஸ்ரீ சங்கடஹர மகாகணபதி கோயில், தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயில் ஆகியவற்றிலும் வியாழக்கிழமை கூடாரைவெல்லும் வைபவம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai