Enable Javscript for better performance
விபத்தில் உயிரிழந்த பளுதூக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு பாஜக நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் உயிரிழந்த பளுதூக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு பாஜக நிதியுதவி

    By DIN  |   Published on : 12th January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடமேற்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த மூன்று பளுதூக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில்  தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
    வடமேற்குத் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில் திகம்சந்த், சக்ஷாம் யாதவ், சூரஜ், ஆகிய பளுதூக்கும் வீரர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் சக்ஷாம் யாதவ் இந்தியா சார்பில் சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். இந்த வீரர்களின் குடும்பத்தினரை பாஜகவின் தில்லி  தலைவர் மனோஜ் திவாரி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அக்குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில், வியாழக்கிழமை அந்த நிதியுதவி வழங்கப்பட்டது.  
    மனோஜ் திவாரியின் சார்பில் அவரது தனிச் செயலர் அம்பிகேஷ் பாண்டே,  கட்சியின் தில்லி  செய்திப் பிரிவின் உதவி அமைப்பாளர் ஆனந்த் திரிவேதி, சட்டப் பிரிவின் அமைப்பாளர் சூரிய பிரகாஷ் காத்ரி ஆகியோர் உயிரிழந்த விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து நிதியுதவியை வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai