Enable Javscript for better performance
ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட  3 பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட  3 பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 13th January 2018 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து துப்பாக்கிகள்,  தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையர் டாக்டர் ஜாய் டிர்க்கி கூறியதாவது:
    தில்லியில் சில கிரிமினல்கள் சட்டவிரோத இறக்குமதி ஆயுதங்களை கையாளுவதாக குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து,  கிரிமினல்கள் குறித்த விவரங்களை சேர்க்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பஸ்சிம்புரி பகுதியில் ஜனவரி 9-ஆம் தேதி தில்லியைச் சேர்ந்த பிரதீக் ஷோக்கீன் (36), லலித் குமார் ஆனந்த் (43) வாஸீம் (எ) சோனு (38)  ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    பிரதீக்கிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களும், வாஸீம் மற்றும் லலித் குமாரிடம் தலா ஒரு துப்பாக்கி, இரு தோட்டாக்களும் இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் வைத்திருந்த காரிலும் சில ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  
    இதைத் தொடர்ந்து, மூவரும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.  அப்போது,  வாஸீமிடமிருந்து மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் தில்லி, என்சிஆர் பிராந்தியத்தில் இக்கும்பல் ஆயுதங்களை விநியோகம் செய்ததும் தெரிய வந்ததாக காவல் உயரதிகாரி ஜாய் டிர்க்கி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai