Enable Javscript for better performance
கார் திருடும் 3 பேர் கும்பல் கைது: 30 வானகங்கள்  மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கும்பலை தில்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  7 கார்கள், 23 மோட்டார் சைக்கிள்கள் என 30 வாகனங்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து குற்றப் பிரிவு துணை ஆணையர் டாக்டர் ஜாய்  டிர்க்கி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜனவரி 10-ஆம் தேதி பிரசாந்த் விஹார் குற்றப் பிரிவு போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில்,  இருவர் திருட்டுக் காருடன் கராலா பகுதிக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து,  இன்ஸ்பெக்டர் முகேஷ் அன்டில் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சான்ட்ரோ காரில் வந்த இருவர் சாலையோரம் நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.  மூவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
     அப்போது,  அவர்கள் இருவரும் வந்தது திருடப்பட்ட கார் எனத் தெரிய வந்தது.  இதையடுத்து,  மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மூவரும் தில்லி நிலோத்தி விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹனி சிங் (எ) அவ்தார் சிங் (26, ஹரி என்கிளேவ் பகுதியைச் சேர்ந்த பர்வேஷ் (28),  ஆமீர் (எ) சமீர் (25) என்பது தெரியவந்தது.  மூவரும் வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து,  ஹனி சிங்கின் வீட்டில் இருந்து 7 கார்கள், 23 மோட்டார்சைக்கிள்கள் என மொத்தம் 30 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டதாக காவல் உயர் அதிகாரி ஜாய்  டிர்க்கி தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai