Enable Javscript for better performance
கிழக்கு தில்லி எம்பி அலுவலகத்துக்கு "ஐஎஸ்ஓ' சான்றிதழ்!- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி எம்பி அலுவலகத்துக்கு "ஐஎஸ்ஓ' சான்றிதழ்!

    By DIN  |   Published on : 13th January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜகவைச் சேர்ந்த கிழக்கு தில்லி எம்பி மகேஷ் கிரியின் அலுவலகத்துக்கு சர்வதேச தரச்சான்று நிறுவனத்தின் (ஐஎஸ்ஓ) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
    விவேக் விஹாரில் அமைந்துள்ள மகேஷ் கிரி எம்பியின் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தரமான சேவைகளுக்கும், பிரச்னைகள் குறித்து மக்கள் அளிக்கும் ஆவணங்களைச் சேகரித்து அதற்கான தீர்வை காண்பதில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளுக்கும் குறிப்பிட்டு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
    தனது அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ 9001:2015 சான்றிதழ் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த மகேஷ் கிரி,  எனது அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவை அளிக்க இந்த சான்றிதழ் ஊக்குவிக்கும் என்றார். 
    மேலும், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாகவும் மகேஷ் கிரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai