குடியரசுத் தலைவர் மாளிகையில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியைக் காண புதிய வசதி!
By DIN | Published on : 13th January 2018 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் மாளிகையில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 10 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கும் நடைபெறுகிறது.
இதைக் காண்பதற்காக வரும் பார்வையாளர்கள் இனி www.rashtrapatisachivalaya.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
இதற்காக கட்டணம் ஏதும் இல்லை. சுமார் 45 நிமிடங்கள் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். தற்போதைக்கு ஜனவரி 13, ஜனவரி 14-ம் தேதிகளுக்கு மட்டும் இந்த முன்பதிவு செய்ய முடியும்.
அரசு விடுமுறை தினங்களில் குடியரசு மாளிகைக்கும் விடுமுறை என்பதால், இந்த நிகழ்ச்சியைக் காண முடியாது. வரும் நாள்களில் பிப்ரவரி மாதங்களிலும் இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கான முன்பதிவு இணையதளத்தில் செய்யும் வசதி செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.