Enable Javscript for better performance
சுத்தமான காற்று விழிப்புணர்வு பிரசாரம்: மத்திய, தில்லி அரசு பிப்ரவரி 10-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சுத்தமான காற்று விழிப்புணர்வு பிரசாரம்: மத்திய, தில்லி அரசு பிப்ரவரி 10-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 13th January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசுவைத் தடுக்க, சுத்தமான காற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசும், தில்லி அரசும் இணைந்து பிப்ரவரி 10-ம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளன.
    காற்று மாசு பிரச்னை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்தக் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலர் சி.கே. மிஸ்ரா, தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:
    தில்லியில் சுத்தமான காற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படும். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தில்லி அரசு, புது தில்லி முனிசிபல் கவுன்சில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும்.
    இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பழக்கத்தைக் 
    கடைப்பிடிக்கக் கோரி பொது மக்களிடம் வலியுறுத்தப்படும். இந்தப் பணியில் 70 அதிகாரிகள் கொண்ட குழு ஈடுபடும். 
    தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவை தொகுதிகளையும் இந்தக் குழு சென்று காற்று மாசுவுக்கான காரணம் குறித்தும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆய்வு செய்வர். 
    மேலும், குப்பைகள் எரிப்பு, காற்றல் தூசு கலப்பு ஆகிய விவகாரங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
    இந்த விழிப்புணர்வு பணியில் தில்லி குடியிருப்பு நலச் சங்கங்களும், வணிகர் சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai