Enable Javscript for better performance
தில்லி அரசு, மாநகராட்சிகள் மீது பகவான் கோயல் சாடல்: வணிக வளாக சீல் வைப்பு விவகாரம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அரசு, மாநகராட்சிகள் மீது பகவான் கோயல் சாடல்: வணிக வளாக சீல் வைப்பு விவகாரம்

    By DIN  |   Published on : 13th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் நடவடிக்கையில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசும், மாநகராட்சிகளை ஆளும் பாஜக அரசும் நாடகமாடி வருவதாக ராஷ்டிரவாதி சிவ சேனா அமைப்பின் தலைவரும்,  ஐக்கிய இந்து முன்னணியின் பொதுச் செயலருமான பகவான் கோயல்  குற்றம்சாட்டினார்.
    தில்லியில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு உருமாற்றக் கட்டணம் செலுத்தத் தவறிய வணிக வளாகங்களையும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் கட்டப்பட்ட வணிக வளாகங்களையும் மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் சீல் வைத்து வருகிறது. 
    இந்நடவடிக்கை, தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பல வர்த்தக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 
    இந்நடவடிக்கை தொடர்பாக, பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
    இந்நிலையில், வணிக வளாகங்கள் சீல் வைக்க்பபடுவது தொடர்பாக  ராஷ்டிரவாதி சிவ சேனா அமைப்பின் தலைவர் பகவான் கோயல்  செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    ஆம் ஆத்மி அரசும், பாஜகவும் இந்த விஷயத்தில் நாடகமாடி வருகின்றன.  வணிக வளாகங்கள் சீல்வைக்கப்படுவது  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனால்,  வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
    இந்த சீல் வைப்பு நடவடிக்கை தொடர்ந்தால் வணிகர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஜி.எஸ்.டி.யால் ஏமாற்றப்பட்ட வணிகர்கள்,  சீல் வைப்பு நடவடிக்கையால் மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.  
    மக்களுக்கு ரூ.10-க்கு உணவு கொடுப்பதாகச் சொல்லும் மாநகராட்சிகள், தங்களுடைய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றன. உதவித்தொகை கிடைக்காமல் முதியோர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். 
    மாநகராட்சிகளை ஆளும் பாஜக, மக்களைத் தொடர்ந்து  ஏமாற்றி வந்தால் காங்கிரஸ் கட்சிதான் பலனடையும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai