Enable Javscript for better performance
போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண:  குருகிராமில் 2 சுரங்கப்பாதை சாலைகள் திறக்க ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண:  குருகிராமில் 2 சுரங்கப்பாதை சாலைகள் திறக்க ஏற்பாடு

    By DIN  |   Published on : 13th January 2018 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் குருகிராமில்  இரு சுரங்கப்பாதை சாலைகள் வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஹரியாணா முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
    தேசியத் தலைநகர் வலயம் குருகிராமில் 2016-ஆம் ஆண்டு ஜூலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பல மணி நேரம் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 
    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிக்னேச்சர் டவர்,  இஃப்கோ சௌக்,  ராஜீவ் சௌக் ஆகிய மூன்று முக்கியச் சந்திப்புகளில் இரு சுரங்கப் பாதைகள் இலகுவான போக்குவரத்துக்காக அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 
    அப்பணிகள் தற்போது முடிவுற்ற நிலையில்,  சிக்னேச்சர் டவர்,  ராஜீவ் சௌக் பகுதி ஆகியவற்றில் இரு சுரங்கப் பாதைகளை பயணிகளுக்காக வரும் ஜனவரி 20-ஆம் தேதி திறந்துவிடப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதைகளை ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் திறந்துவைக்க உள்ளார்.
    இதுகுறித்து ஹரியாணா மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ராவ் நர்பீர் சிங் கூறியதாவது: இந்த இரு சுரங்கப் பாதைகளும் திறக்கப்பட்டால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் எளிதாகக் கடந்து செல்லும்.  போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளும் தீர்க்கப்படும்.  சிக்னேச்சர் டவர்,  இஃப்கோ சௌக்,  ராஜீவ் சௌக் ஆகிய முக்கியச் சந்திப்புகளில் இந்த இரு சுரங்கப்பாதை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். 
    சிக்னேச்சர் டவரை கடக்கும் போது ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வழிகள் இருக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.   பழைய, புதிய குருகிராம் பகுதி இடையே போக்குவரத்து எளிதாக அமையும்.  ராஜீவ் சௌக் பகுதி சுரங்கப்பாதை சாலையின் இரு பகுதியிலும் இரு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
    இதனால்,  சோன்ஹா சாலை முதல் பழைய குருகிராம் வரையிலும் சமிக்ஞை இல்லாத போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். இரு சுரங்கப்பாதை சாலைகளும் ஜனவரி 20-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டாலும் இணைப்புச்சாலைகளின் பணி இன்னும் நடைபெற்று வருகிறது என்று பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai