Enable Javscript for better performance
வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: மனோஜ் திவாரி- Dinamani

சுடச்சுட

    

    வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: மனோஜ் திவாரி

    By DIN  |   Published on : 13th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் நடவடிக்கையை நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச  நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை நேரில் சந்தித்து பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
    உருமாற்றக் கட்டணங்கள் செலுத்தப்படாத, சட்டத்துக்குப் புறம்பான வகையில் அமைக்கப்பட்ட வணிக வளாகங்கள் உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவால் தொடர்ச்சியாக சீல் வைக்கப்படுகின்றன.  இந்நிலையில்,  கண்காணிப்புக் குழுவினரை மனோஜ் திவாரி தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். அப்போது இந்த வேண்டுகோளை மனோஜ் திவாரி முன்வைத்தார். 
    மேலும், இந்த நான்கு மாதங்களுக்குள்  வணிக வளாகங்கள் மீதான புகார்களை மத்திய அரசின் உதவியுடன் நிவர்த்தி செய்ய  தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கண்காணிப்புக் குழுவினரிடம் அவர் உறுதியளித்தார். 
    இது தொடர்பாக மனோஜ் திவாரி கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளில் தில்லியில்  சட்டத்துக்குப் புறம்பான வகையில்  கட்டப்பட்ட வணிக வளாகங்கள் தொடர்பாக வணிகர்களை மட்டும் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் இல்லை. 
    அக்கட்டடங்களுக்கு அனுமதியளித்த அரசு அதிகாரிகளே முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் ஆவர்.  சீல் வைக்கப்படுவதற்கு  முன்பு வணிகர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும். தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசின் தவறுகளால் வணிகர்கள் பாதிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?' என்றார்.  
    இச்சந்திப்பின் போது சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, மக்களவை உறுப்பினர் பர்வீஷ் வர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai