Enable Javscript for better performance
ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தில்லி பாஜகவினர் ஆர்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தில்லி பாஜகவினர் ஆர்பாட்டம்

    By DIN  |   Published on : 16th January 2018 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மக்களை தொடர்ந்து ஆம் ஆத்மி அரசு ஏமாற்றி வருவதாக கூறி, சட்டப்பேரவை அருகே பாஜகவினர் திங்கள்கிழமைஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மின்சாரம், குடிநீர்க் கட்டணம் உயர்வு, வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தில்லி பாஜகவின் அனைத்துப் பிரிவுகளும் கலந்து கொண்டன. 
    ஆர்பாட்டத்தில் தில்லி பாஜக துணைத்தலைவர் ஜெய் பிரகாஷ், பொதுச் செயலர்கள் ரவீந்தர் குப்தா, ராஜேஷ் பாட்டியா, தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் கபூர், பாஜக இளைஞர் அமைப்பின் தலைவர் சுனில் யாதவ், பாஜக மகளிர் அணித் தலைவர் பூனம் ஜா, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் கௌரவ் காரி, சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் மொகமத் ஹரூன், விவசாயப் பிரிவுத் தலைவர் முகேஷ் மன், மாவட்டத் தலைவர்கள் மனோஜ் ஷோகீன், நீல்தாமன், அரவிந்த் கர்க் முன்னாள் எம்எல்ஏக்கள் சுபாஷ் சச்தேவா, தர்மதேவ் சோலங்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆர்ப்பாட்டத்தில், பாஜக துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் பேசுகையில், "சீல் நடவடிக்கையில் கேஜரிவால் பாராமுகமாக உள்ளார். இந்நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். 
    தில்லியில் உள்ள 351 சாலைகளை அறிவிக்கை செய்யாததே வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகும். இதற்கு கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிஅரசு தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும். தில்லி அரசின் செயலால் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார். 
    பாஜக பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா பேசுகையில், "தில்லியில் உள்ள வீடற்ற மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதியளித்துதான் கேஜரிவால் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால், வீடற்ற மக்களை அவர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். இது வரை சுமார் 200 வீடற்றவர்கள் குளிரால் இறந்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக தில்லி அரசு பாராமுகமாக உள்ளது' என்றார். 
    பாஜக இளைஞர் அமைப்பின் தலைவர் சுனில் குப்தா பேசுகையில், "தில்லி அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க ஆம் ஆத்மி அரசு தவறி விட்டது. இதனால், மக்கள் தங்களுடைய குழந்தைகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலை தில்லி அரசு உருவாக்கியுள்ளது' என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai