எய்ம்ஸ் அறுவை சிகிச்சை துறையில் முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
By DIN | Published on : 16th January 2018 04:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைத் துறையின் டென்டர்கள் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
எய்மஸ் மருத்துவமனையின், ரூ. 24.17 லட்சம் மதிப்புள்ள 17 டென்டர்கள் விடப்பட்டத்தில் முறைகேடு நடந்ததாக, எய்மஸ் மருத்துவமனையின் கிளர்க் நரேஷ் குமார், எச்.எஸ். என்டர்பிரைசஸின் உரிமையாளர் சாந்தினி ஜட்டா, ஊழியர் ஜக்மோகன் ரிஷி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2018, மே 14-ம் தேதி அப்போதைய எய்ம்ஸ் ஊழல் தடுப்பு துறையின் தலைவராக இருந்த சஞ்சீவ் சதுர்வேதி பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐக்கு அனுப்பியிருந்த அறிக்கையில், தற்போது முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம் எச்.எஸ். என்டர்பிரைசஸும் இடம் பெற்றிருந்தது.
சந்தையில் நிலவும் ஆரோக்கியமான போட்டியைத் தவிர்ககும் வகையில், இந்த நிறுவனம் போலியான விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அந்த டென்டருக்கான பணம் பெற முடியும். இதை எச்.எஸ். என்டர்பிரைசஸ் நிறுவனம் செய்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் அறுவை சிகிச்சை துறையில் ரூ. 24.17 லட்சத்துக்கு வழங்கப்பட்ட17 டென்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக எச்.எஸ். என்டர்பிரைசஸ் நிறவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.