Enable Javscript for better performance
ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம்- Dinamani

சுடச்சுட

    

    ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் ஓடும் காரில் 22 வயது இளம் பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.  
    இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:
    22 வயதுடைய அந்த இளம் பெண் ஃப்ரீதாபாதில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். வழக்கம்போல சனிக்கிழமை வேலைக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 
    அப்போது மாலை 6.30 மணி அளவில் அந்தப் பகுதியில் ஒரு காரில் வந்த கும்பல் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து காரினுள் ஏற்றி கடத்தியது.  அப்பெண்ணை சுமார் 2 மணி நேரம் காரினுள்ளேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பல்லாப்கர்ஹ் பகுதியில் இறக்கிவிட்டு அக்கும்பலினர் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் துப்புத் துலக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  மர்ம நபர்களை அடையாளம் காணும் வகையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன.  அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
    நொய்டாவில்: இதற்கிடையே, நொய்டாவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸில் புகார் 
    அளிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai