Enable Javscript for better performance
காவல் நிலையத்திலேயே போலீஸ் உடையை திருடி மிரட்டியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையத்திலேயே போலீஸ் உடையை திருடி மிரட்டியவர் கைது

    By DIN  |   Published on : 16th January 2018 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவல் நிலையத்திலேயே போலீஸ் உடையை திருடிச் சென்று ஊடக நிறுவனத்தில் மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
    இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியதாவது: தில்லியில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வரும் நபர், நொய்டாவில் ஊடக அலுவலகங்கள் நிறைந்த ஃபிளிம் சிட்டி எதிரே தனது காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். 
    இந்தக் காரின் டயர்களின் காற்றை அங்கிருந்த பாதுகாவலர் வெளியேற்றியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று, காவல் பொறுப்பாளர் ரவிந்திர சிங் பேகலின் போலீஸ் உடையை திருடி அணிந்துக் கொண்டு, அந்த ஊடக நிறுவனத்துக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளார்.
    இதையடுத்து, அந்த தனியார் ஊடக அலுவலகத்தில் இருந்து போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனது காவல் பணி உடையை திருடியதாக ரவிந்திர சிங் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai