Enable Javscript for better performance
தமிழ்நாடு இல்லத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு இல்லத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 16th January 2018 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகளுடன் இரு நாள்கள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
     புது தில்லி கௌடில்யா மார்கில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் முதல் நாளான சனிக்கிழமை பிற்பகலில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களின் சிறந்த கோலங்களை மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சக செயலர் லீனா நாயர் தலைமையில் அமர்ஜோத் பஜாஜ், இந்து ஆனந்த், ஸ்மிதா சௌபே ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு தேர்வு செய்தனர். மாலை 6 மணிக்கு போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர்கள் ஜஸ்பீர் சிங் பஜாஜ், நா. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    விழாவின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு இல்ல திறந்தவெளி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி 21 மன்பாண்டங்களில் பொங்கல் வைக்கும் "பெரும் பொங்கல்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். விழாவில் 38 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்ற கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும், 45 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை தில்லி வாழ் தமிழர்களும், வெளிநாட்டவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியை செய்தித் துறை இணை இயக்குநரும், தமிழ்நாடு மின்வாரிய புது தில்லி உள்ளுறை மேலாளருமான பொ. முத்தையா தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் தமிழ்நாடு இல்ல துணை உள்ளுறை ஆணையர் என்.இ. சின்னத்துரை நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai