Enable Javscript for better performance
தில்லி காங்கிரஸின் சட்டம், மனித உரிமைப் பிரிவுத் தலைவர் நியமனம்: அஜய் மாக்கன் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி காங்கிரஸின் சட்டம், மனித உரிமைப் பிரிவுத் தலைவர் நியமனம்: அஜய் மாக்கன் வரவேற்பு

    By DIN  |   Published on : 16th January 2018 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி காங்கிரஸ் கட்சியின்  சட்டம் மற்றும் மனித உரிமைப் பிரிவின் தலைவராக வழக்குரைஞர் சுனில் குமார் நியமிக்கப்பட்டதற்கு கட்சியின் தலைவர் அஜய் மாக்கன் வரவேற்றுள்ளார்.
    தில்லி காங்கிரஸின் சட்டம் மற்றும் மனித உரிமைப் பிரிவின் தலைவராக வழக்குரைஞர் சுனில் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவு கடந்த 12-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.  இந்த முடிவை தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் வரவேற்று திங்கள்கிழமை கூறியதாவது: 
    சுனில் குமார், காங்கிரஸ் மாணவர் அமைப்பில் முக்கியப்  பதவிகள் வகித்தவர். தில்லி இளைஞர் காங்கிரஸின் உதவித் தலைவராகவும் பணியாற்றியவர். தில்லி காங்கிரஸின் முன்னேற்றத்துக்காக  பல ஆண்டுகளாக  கடுமையாக உழைத்து வரும் இவர், தில்லி காங்கிரஸின் சட்டம்  மற்றும் மனித உரிமைப் பிரிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என்றார் அஜய் மாக்கன்.
    நியமனம் குறித்து குறித்து சுனில் குமார் கூறுகையில்,  "தில்லி காங்கிரஸின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை தந்த காங்கிரஸ் தலைமைக்கு நன்றி' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai