Enable Javscript for better performance
தூய்மை இந்தியா திட்டத்துக்கு  ரூ.100 கோடியில் வாகனங்கள் கொள்முதல்: என்டிஎம்சி நிலைக் குழு கூட்டத்தில- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை இந்தியா திட்டத்துக்கு  ரூ.100 கோடியில் வாகனங்கள் கொள்முதல்: என்டிஎம்சி நிலைக் குழு கூட்டத்தில் முடிவு

    By DIN  |   Published on : 16th January 2018 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை திறமையாகச் செயல்படுத்துவதற்கு ரூ.100 கோடியில்  வாகனங்கள் கொள்முதல் செய்ய மாநகராட்சி நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    வடக்கு தில்லி மாநகராட்சியி நிலைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  நிலைக்குழுத் தலைவர் திலக் ராஜ் கட்டாரியா கூறியதாவது: 
    தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுச்சேர்கும் வகையில் ரூ.100 கோடியில் வாகனங்கள் கொள்முதல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முதலில் 22 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் விரைவில் கொள்முதல் செய்யப்படவுள்ளன.  திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக வடக்கு தில்லி மாநகராட்சி இருப்பதை மேலும் உறுதி செய்ய ரூ.14 லட்சம் செலவிடப்படவுள்ளது.  மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் 20,000 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.  மாநகராட்சியின் கட்டடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்படவுள்ளன.  இதற்கான செலவில் 30 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கவுள்ளது. இத்திட்டம் 30 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai