Enable Javscript for better performance
மீண்டும் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியானார் ராஜீவ் ஷக்தேர்- Dinamani

சுடச்சுட

    

    மீண்டும் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியானார் ராஜீவ் ஷக்தேர்

    By DIN  |   Published on : 16th January 2018 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ராஜீவ் ஷக்தேர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
    அவருக்கு தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 55 வயதான நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
    இதையடுத்து, சுமார் 20 மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தில்லி உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
    இதற்கான பரிந்துரையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது.
    அதன் அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய சட்ட அமைச்சகம் பணியிட மாற்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது. 
    கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிலவரம்படி, தில்லி உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதிகளில் 38 பேர் மட்டும் உள்ளனர். 22 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai