Enable Javscript for better performance
லாஜ்பத் நகர் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    லாஜ்பத் நகர் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறப்பு

    By DIN  |   Published on : 16th January 2018 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளுக்காக சில நாள்களாக மூடப்பட்டிருந்த லாஜ்பத் நகர் மேம்பாலம் மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
    தில்லி லாஜ்பத் நகர் மேம்பாலத்தில்  குறிப்பிட்ட சில பகுதிகளில் விரிசல் காணப்பட்டதால் அங்கு சீரமைப்புப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டது. இதனால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், 14- ஆம் தேதி மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்காக மேம்பாலம் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதன்படி இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை  திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
    இந்த மேம்பால மறுசீரமைப்புப் பணிகளை 14- ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்ய  போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. இந்தப் பாலத்தில் உள்ள விரிவாக்க இணைப்புப் பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதனால், 12 இணைப்புப் பகுதிகள் மாற்றப்பட்டன. மேம்பாலத்தின் ஒரு பகுதி  சீரமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பகுதிக்கான மறுசீரமைப்புப் பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. முதல் கட்டமாக ஆஷ்ரம் சவுக்கில் இருந்து மூல் சந்த் இடையான மேம்பாலப் பகுதி சீரமைக்கப்பட்டுள்ள. மூல்சந்தில் இருந்து ஆஷ்ரம் சவுக்கிடையான பகுதியில் பிப்ரவரி முதல் வாரத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்  என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai