Enable Javscript for better performance
வடக்கு தில்லியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றல்- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட கரோல் பார்க் மற்றும் சிவிக் லைன் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. 
    இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், கரோல் பார்க் மற்றும் சிவிக் லைன் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் மாநகராட்சியால் ஞாயிற்றுக் கிழமை இடித்து அகற்றப்பட்டன.  பிளாக்  எண் 67, பாக் ராவ் ஜி, நாராயணா தொழில்பேட்டை பகுதி உள்பட கரோல் பார்கின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 13 கட்டடங்களும், சிவிக் லைன் பகுதியில் ஜனக்புரி, ஆதர்ஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  29 கட்டடங்களும் இடித்து அகற்றப்பட்டன.
     மேலும், கரோல் பார்க் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கட்டப்பட்ட இரண்டு கட்டங்கள் காவல் துறையின் உதவியுடன் சீல் வைக்கப்பட்டன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai