Enable Javscript for better performance
அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் திட்டம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் திட்டம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

    By DIN  |   Published on : 17th January 2018 12:39 AM  |   அ+அ அ-   |    |  

    எவ்வித வருவாய் வரம்பு பிரிவும் இல்லாமல் அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் வழங்கும் தில்லி அரசின் திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    தில்லியில் நிரந்தரமாக வசிப்போருக்கு வருவாய் வரம்பு பிரிவு இல்லாமல் உயர்வகை பரிசோதனைகள், இலவச மருந்துகள், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும் வகையிலான ஒரு திட்டத்தை ஆம் ஆத்மி அமைச்சரவை கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி நிறைவேற்றியது.
     இதையடுத்து, இத்திட்டத்தின் ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில்,  முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வருவாய் வரம்பு பிரிவு இல்லாமல் அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் அளிக்கும் இத்திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளார்' என தெரிவித்துள்ளார்.
    இந்தத் தகவலை துணைநிலை ஆளுநர் செயலக அதிகாரியும் உறுதி செய்தார். 
    முன்னதாக,  டிசம்பர் 29-ஆம் தேதி  தில்லி ஆரோக்ய கோஷ் (டிஏகே) திட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புக் கொண்டார். 
    எனினும்,  சில வருவாய் உச்சவரம்பை தொடர்ந்து வைத்திருக்குமாறும்,  அப்போதுதான்,  அரசின் ஆதாரவளங்கள் ஏழைகளுக்குப் பயன்படுத்தப்படும். வசதியானவர்களால் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தில்லி அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார்.  
    இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "வருவாய் வரம்பு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டால், அது திட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும்' என்று கூறியிருந்தார்.
    தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "ஏழைகளும் உள்ளனர். வருவாய் உச்ச வரம்புக்கு மேல் உள்ளவர்களும் அரசுக்கு வரி செலுத்துவோராக உள்ளனர். இதனால், இத்திட்டத்தின் சேவைகளில் இருந்து யாருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படக் கூடாது. நோய்களுக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு ஏழை, பணக்காரர்கள் என்று நாம் வேறுபடுத்த முடியாது' என்று கூறியிருந்தார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp