Enable Javscript for better performance
ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலைக்கான  சுங்கக் கட்டணம் நிர்ணயம்- Dinamani

சுடச்சுட

    

    ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலைக்கான  சுங்கக் கட்டணம் நிர்ணயம்

    By DIN  |   Published on : 17th January 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலைக்கான சுங்கக் கட்டணத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. 302 கி.மீ. தூரம் கொண்ட இந்த விரைவுச் சாலையின் புதிய கட்டண நிர்ணயம், ஜனவரி 19-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
    இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில அரசு செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலையில் கார்-ஜீப்-வேன்-இலகு ரக வாகனங்களுக்கு ரூ. 570-ம், இலகு ரக வர்த்தக வாகனங்கள் - மினி பஸ்களுக்கு ரூ. 905-ம், டிரக் - பஸ்களுக்கு ரூ. 1,815-ம், கனரக கட்டுமான இயந்திரங்கள் - பெரிய வாகனங்களுக்கு ரூ. 2,785-ம், 7 மற்றும் அதற்கு அதிகமான ஆக்ஸில்களைக் கொண்ட பெரிய வாகனங்களுக்கு ரூ. 3,575-ம் சுங்கக்கட்டனமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai