Enable Javscript for better performance
என்டிஎம்சி பகுதியில் விரைவில் சாலையோர மரங்கள் கணக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    என்டிஎம்சி பகுதியில் விரைவில் சாலையோர மரங்கள் கணக்கெடுப்பு

    By DIN  |   Published on : 17th January 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்குள்பட்ட (என்டிஎம்சி) பகுதிகளில் உள்ள சாலையோர மரங்கள் மிக விரைவில் அறிவியல் முறையில் கணக்கெடுப்பு செய்யப்படவுள்ளது.
    இது குறித்து என்டிஎம்சி தலைவர் நரேஷ் குமார் கூறியதாவது: 
    தில்லியின் மொத்த மக்கள் தொகையில் புதுதில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் 1.5 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், தில்லியின் மிக முக்கியமான இடங்கள் இந்த முனிசிபல் கவுன்சிலுக்குள்பட்ட பகுதியில்தான் இடம் பெற்றுள்ளது. மேலும், என்டிஎம்சியில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பசுமை பகுதி உள்ளது. தில்லியின் முக்கியச் சாலைகளான ஜன்பத் சாலை, அக்பர் சாலை, கே.ஜி. மார்க் ஆகியவற்றில் சாலையோரங்களில் வேம்பு, நாவல், மருதமரம், புளியமரம், அரச மரம், கொன்றை மரம் போன்ற பல அரிய பழைமையான மரங்கள் நிறைந்துள்ளன. இந்த மரங்கள் மிக விரைவில் அறிவியல் முறையில் கணக்கெடுக்கப்பட்டு டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளன என்றார்.
    இது குறித்து என்டிஎம்சி அதிகாரிகள் கூறுகையில், "2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாலையோர மரங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. பூங்காக்களில் உள்ள மரங்கள் குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்படுகின்றன. ஆனால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் தொடர்பாக 2005- ஆம் ஆண்டுக்குப் பிறகு கணக்கெடுப்பு எதுவும் நடக்கவில்லை. மேலும், முறையான தரவுகளும் பேணப்படவில்லை. இச்சாலையோர மரங்களின் அமைவிடம் ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தின் உதவியுடன் மிகச் சரியாக பதிவு செய்யப்படும். மரங்களின் உயரம், அகலம் உள்ளிட்டவை அறிவியல் முறையில் பதிவு செய்யப்படவுள்ளன. மரங்களின் சுகாதாரத் தன்மையும் பதிவு செய்யப்படும். நோய் தாக்குதலுக்குள்ளான மரங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும்' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai