Enable Javscript for better performance
டிபஃன்ஸ் காலனியில் 50 கடைகள் சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி டிஃபன்ஸ் காலனியில் 50 கடைகளுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை சீல் வைத்தது. 
    இது தொடர்பாக  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: 
    டிஃபன்ஸ் காலனியில் உள்ள சில கடைகள் சொத்துகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து புகார்கள்  கிடைக்கப் பெற்றன. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு இந்தப் பகுதியில் ஆய்வு செய்தது. அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி 50 கடைகளின் தரைத் தளங்கள் செவ்வாய்கிழமை காவல் துறையின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai