Enable Javscript for better performance
மத்திய அரசின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆம் ஆத்மி முட்டுக்கட்டை: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆம் ஆத்மி முட்டுக்கட்டை: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 17th January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆம் ஆத்மி அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்கிழமை குற்றம் சாட்டினார். 
    தில்லி பாஜகவின் செயற்குழுக் கூட்டம் என்.டி.எம்.சி. அரங்கில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. இறுதி நாளான செவ்வாய்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
    தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இது பாஜகவினரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். குஜராத், ஹிமாசல் பிரதேசம் ஆகிய மாநிலத் தேர்தல்களிலும் தில்லி பாஜகவினர் கடுமையாக உழைத்தனர். அந்த மாநிலங்களில் பாஜக அடைந்த வெற்றிகளில் தில்லி பாஜகவினருக்கும் பங்குள்ளதை மறுக்க முடியாது. 
    நாட்டின் முன்னேற்றம், சமூக நீதியை நிலை நாட்டுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில், தில்லி பாஜகவினர் தங்களுக்கிடேயே உள்ள வேறுபாடுகளைக் மறந்து பணியாற்ற வேண்டும்.
    தில்லியின் மேம்பாட்டுக்குத் தேவையான சகல உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், தில்லி அரசு, மத்திய அரசின் மேம்பாட்டுப் பணிகளுக்கு முட்டுக் கட்டையாகவுள்ளது. இதனால், மேம்பாட்டுப் பணிகளை மத்திய அரசால் சரிவரச் செய்ய முடியவில்லை. 
    மேலும், வணிக வளாகங்கள் சீல் வைப்பு நடவடிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உதவிகளைச் செய்யவும் தயாராகவுள்ளேன் என்றார் அவர். இந்த நிகழ்வில் தில்லி பாஜகவின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளை விளக்கிக் கூறும் கையேட்டை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
    மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், விஜய் கோயல், பாஜக தேசிய பொதுச் செயலாளர்அனில் ஜெயின், தில்லி பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு, துணைப் பொறுப்பாளர் தருண் சுக், தேசிய செயலர்கள் மகேஷ் கிரி, ஆர்.பி.சிங், மக்களவை உறுப்பினர்கள் மீனாட்சி லேகி, பர்வேஷ் வர்மா, உதித் ராஜ், தில்லி பாஜக முன்னாள் தலைவர்கள் வி.கே.மல்கோத்ரா, மாஞ்சி ராம் கர்க், சதீஷ் உபாத்யாய் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai