Enable Javscript for better performance
வீட்டில் தாய், குழந்தை மர்மச் சாவு: கணவருக்கு போலீஸ் வலைவீச்சு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் தாய், குழந்தை மர்மச் சாவு: கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

    By DIN  |   Published on : 17th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடமேற்கு தில்லியில் வீட்டில் இளம் பெண்ணும், அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.  இச்சம்பவத்திற்குப் பிறகு அப்பெண்ணின் கணவர் மாயமானார்.  
    இருவரையும் கொலை செய்துவிட்டு அவர் தப்பியோடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தில்லி காவல் துறையின் வடமேற்கு சரக துணை ஆணையர் அஸ்லம் கான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    வடமேற்கு தில்லி, ஜஹாங்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் ஒம்பிரகாஷ். இவரது மனைவி சோபா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அனில்  என்ற மகன் இருந்தான்.  6 வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. 
    திங்கள்கிழமை இரவு ஓம்பிரகாஷ் குடும்பத்தினர் உணவு சாப்பிட்டனர். அதன்பிறகு,  ஓம்பிரகாஷுக்கும்  அவரது மனைவிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது,  பிற குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்து வைத்தனர்.  பின்னர், தம்பதி குழந்தைகளுடன் முதல் தளத்திற்கு தூங்கச் சென்றனர்.
    இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை காலை சோபாவும், அனிலும் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்து வீட்டினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 
    போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது கணவர் அங்கிருந்து தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.  தனது தாயையும், தம்பியையும் தந்தை அடிப்பதை தனது கண்ணால் பார்த்ததாக அவர்களது 6 வயது மகன் போலீஸாரிடம் கூறினான். இதையடுத்து, ஒம்பிரகாஷை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  அவரைக் கைது செய்த பிறகுதான் உண்மை விவரம் தெரிய வரும் என்று காவல் துறை உயரதிகாரி அஸ்லம் கான் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai