Enable Javscript for better performance
24 மணி நேரத்தில் 4 சாலை விபத்துகள்: 3 பேர் சாவு;  2 பேர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    24 மணி நேரத்தில் 4 சாலை விபத்துகள்: 3 பேர் சாவு;  2 பேர் படுகாயம்

    By DIN  |   Published on : 17th January 2018 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ரிங் ரோட்டில் 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 4 வெவ்வேறு சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
    இது குறித்து போலீஸார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  தில்லி ராஜ்காட் - மஜ்னு கா டிலா இடையிலான 8 கிலோ மீட்டர் தூர ரிங் ரோடு பகுதியில் 24 மணி நேரத்தில் நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். மூன்று விபத்துகளில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவத்தன்று இரவு, திமர்பூர் பகுதியில் சாலையின் நடுவில் ஆட்டோ ரிக்ஷாவை அதன் ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால், ஆட்டோவின் பின்னால் வந்த ஸ்கூட்டி வாகனம் மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜ்வீர் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    அதேபோன்று, மஜ்னு கா டிலா மற்றும் வாஜிராபாத் மேம்பாலம் பகுதியில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. நான்காவது சம்பவத்தில், ராஜ்காட்டில் ரோந்து மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நான்கு சாலை விபத்துகள் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai