Enable Javscript for better performance
அடர் பனிமூட்டம்: 13 ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் புதன்கிழமை அடர் பனிமூட்டம் நிலவியதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    தில்லியில் கடந்த இரு தினங்களாக  பனிமூட்டம்  நிலவினாலும், வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்தது. செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 9.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் குளிர் காற்று வீசியதாலும், அடர் பனிமூட்டம் நிலவியதாலும் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 5.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், காண்பு திறன் அளவு காலை 8.30 மணியளவில் 200 மீட்டராகப் பதிவாகியது. அதே சமயம், பாலம் வானிலை ஆய்வு மையத்தில் காண்புதிறன் 650 மீட்டராகப் பதிவகாயிருந்தது.  காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதவீதமாக இருந்தது. 
    இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக தில்லியிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 13 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்தது. மேலும், பல்வேறு இடங்களில் மொத்தம் 21 ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தேசியத் தலைநகர் வலயப் பகுதியான குருகிராம், நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் அடர் பனிமூட்டம் நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai