Enable Javscript for better performance
கார் கண்ணாடியை உடைத்து திருட்டு: துவாரகாவில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கார் கண்ணாடியை உடைத்து திருட்டு: துவாரகாவில் இளைஞர் கைது

    By DIN  |   Published on : 18th January 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார் கண்ணாடியை உடைத்து மடிக் கணினியை திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
    இது குறித்து துவாரகா மாவட்ட காவல் துணை ஆணையர் ஷிபேஷ் சிங் செய்தியாளர்களிடம்புதன்கிழமை கூறியதாவது: 
    தில்லியைச் சேர்ந்தவர் வைபவ் கோலி, துவாரகா செக்டார் 12-இல் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய காரை திங்கள்கிழமை வங்கி முன்பாக நிறுத்தியிருந்தார். 
    மாலை சுமார் 4.30 மணியளவில் தனது காரின் ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் உடைப்பதை வைபவ் பார்த்தார். 
    இதையடுத்து, அந்த நபரைப் பிடிக்க அவர் சென்றார். அப்போது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மோதி லால், அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தார். 
    அந்த நபர் மயூர் விஹார் ஃபேஸ் 2 பகுதியைச் சேர்ந்த முகம்மது ஆஷிம் ஷேக் (27) என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், துவாரகா செக்டார் பகுதியில் ஒரு காரின் ஜன்னல் கதவை உடைத்து மடிக் கணினியை அவர் திருடியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆஷிம் ஷேக் கைது செய்யப்பட்டார். 
    அவரிடமிருந்து மடிக் கணினி, இரு செல்லிடப்பேசிகள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் மீது துவாரகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    அவர் வேறு திருட்டுகளில் ஏதும் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai